என் மலர்
உள்ளூர் செய்திகள்

என்.ஆர்.தனபாலன்
முல்லை பெரியாறில் கேரளா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- என்.ஆர்.தனபாலன்
முல்லை பெரியாறில் கேரளா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முல்லை பெரியார் அணைப் பகுதியில் 136 அடி உயரத்தில் புதிய அணை கட்டுவோம் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மதுகான் இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். இது முற்றிலும் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிரான முடிவாகும்.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் மத்திய அரசின் பொறியாளர்களின் ஆய்வு அறிக்கைக்குப்பின் முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தின் அளவை 144 அடியிலிருந்து குறைக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கும் நிலையிலும், கேரள அரசு வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள முயல்கிறது. இதனை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story