என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தேர்தல் பார்யை£ளர் தங்கவேல் மற்றும்
வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான விதிமுறைகளை கலெக்டர் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கலெக்டர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் தங்கவேல், கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசிய தாவது:&
மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. அதனையொட்டி வட்டார தேர்தல் அலுவலர்கள் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான உபகரணங்களை நாளை (18ந்தேதி) செல்லும் வகையில் திட்டமிடுதல் வேண்டும்.
இவ்வாறு செல்லும் பொருட்கள் சரியாக உள்ளதா என பார்வையிட்டு ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் அனுப்பவேண்டும். மேலும் வாக்குப்பதிவு நாளன்று மாற் றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்ல ஏதுவாக, சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவதையும் அனைத்து மையங்களுக்கும் சக்கர நாற்காலிகள் அனுப்பி வைத்திட வேண்டும்.
அதேபோல் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் போதிய அளவு மின்சார வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதுடன் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.
ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் கட்டாயம் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணித்திட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகள் என கருதப்படும் இடங்களில் வெப் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும். எனவே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்தையும் ஆய்வு செய்து சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திடவேண்டும்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் தலைமை அலுவலர் உரிய படிவங்களை பூர்த்தி செய்து முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அதுவரை பணி மேற்கொள்ளும் ஒவ்வொரு அலுவலரும் கவனமுடன் செயல்பட்டு தேர்தல் நல்ல முறையில் நடத்தி முடித்திடவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, மகளிர் திட்ட இணை இயக்குநர் வானதி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) ராம்கணேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்) லோகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






