என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஓட்டல் உரிமையாளர் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு?

    சிவகங்கை ஓட்டல் உரிமையாளர் கொலையில் சிக்கிய 8 பேரிடம் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.
    சிவகங்கை 

    சிவகங்கை ராமசாமி நகரை சேர்ந்த சகோதரர்கள் இளங்கோ (வயது 39), மணிவண்ணன்(28). இவர்கள் இருவரும் சேர்ந்து சிவகங்கை-மேலூர் ரோட்டில் புதிய ஓட்டல் திறந்தனர். சம்பவத்தன்று இரவு அண்ணன், தம்பி இருவரும் ஓட்டலில் இருந்தனர். 

    அப்போது அவர்களது கடைக்கு வந்த 10 பேர் அடங்கிய கும்பல் மணிவண்ணனை வாளால் சரமாரியாக வெட்டியது. அவர்களை தடுத்த இளங்கோவையும், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதையடுத்து பலத்த வெட்டுக்காயங்களுடன் கிடந்த மணிவண்ணன் மற்றும் இளங்கோ ஆகிய இருவரும் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணி வண்ணன் பரிதாபமாக இறந்தார். 

    ஓட்டலில் புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

    இந்த கொலை தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிந்து  விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக மணிவண்ணன் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

    தீபாவளி பண்டிகையின்போது மணிவண்ணன் பட்டாசு கடை நடத்தியுள்ளார். அப்போது அவரது கடைக்கு வந்த சிவகங்கை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (27) என்பவர் பட்டாசுகள் வாங்கிவிட்டு அதற்கு பணம் கொடுக்கவில்லை. 

    இதுகுறித்து கேட்டபோது  மணிவண்ணன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கடையில் இருந்த ஊழியர்கள் சக்திவேலை தாக்கியதாக கூறப்படுகிறது.  இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

    அதற்கு பழி தீர்க்கும் விதமாக சக்திவேல் உள்ளிட்டோர் மணிவண்ணனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.   இந்த கொலை தொடர்பாக சக்திவேல் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். 

    அவர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீசார்  தீவிர விசாரணை நடத்தி சக்திவேல், அவரது தம்பி வெற்றிவேல் (19), கார்த்திக் ராஜா (26), கொட்டகுடியை சேர்ந்த ஆகாஷ் (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 

    மற்றவர்களை போலீசார் தேடிவந்தநிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம்(27), சிவகங்கை போஸ் ரோடு சரவணக்குமார்(27), தொண்டி ரோடு அருண்பாண்டியன்(20), புதுப்பட்டி மதன்குமார்(19) ஆகிய 4 பேரும் கரூர் கோர்ட்டில் சரணடைந்தனர். 

    கோர்ட்டில் சரணடைந்த 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் கரூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அதேபோல் கைது செய்யப்பட்ட 4 பேரும் விசா ரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பத்தூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    மணிவண்ணன் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் அது குறித்து கண்டறிவதற்காக கைது செய்யப்பட்டு மற்றும் கோர்ட்டில் சரணடைந்து ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 

    அதற்கான நடவடிக்கையில் சிவகங்கை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  
    Next Story
    ×