என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மேச்சேரியில் குடிசை வீட்டில் தீ விபத்து

    மேச்சேரியில் குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
    மேட்டூர்:

    மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள வெடிக்காரனூரை சேர்ந்தவர் பச்சையம்மாள்(50), இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். 

    இவரது  குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து மளமள வென எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

    இந்த தீ விபத்து காரணமாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. 

    இது தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×