என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்தில் சேதம் அடைந்த வீடு.
    X
    தீ விபத்தில் சேதம் அடைந்த வீடு.

    கொங்கணாபுரத்தில் குடிசை வீட்டில் தீ விபத்து

    எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் குடிசை வீட்டில் தீ பற்றி எரிந்ததில் பொருட்கள் சேதமாயின.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தை அடுத்த ,பூவானூர் ஜோசியர் காடு கண்ணாந்தேரியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது44).தொழிலாளி. இன்று காலை இவரது வீட்டினர் தோட்டத்துக்கு சென்றுவிட்டனர்.

    அப்போது திடீரென வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ பிடித்து எரிந்தது.இதில் குடிசை முழுவதும் தீ பற்றியது. உடனே அப்பகுதியினர் திரண்டு தீயை அணைக்கமுயன்றனர்.

    எனினும் தீயை அணைக்க முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த  பீரோ, 2. துணிகள் மற்றும் அதன் அடியில் வைத்து இருந்த பணம் ரூ.3 லட்சம், 3 வேர்கடலை மூட்டைகள், 5 ஆரிய மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தன. வீட்டில் இருந்தவர்கள் தோட்டத்துக்கு சென்றதால் உயிர்சேதம் ஏற்படவில்லை.

    இது சம்பந்தமாக கொங்கணாபுரம் காவல் துறையினர்  விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×