என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்படுவதையும், பக்தர்கள் தரிசனம் செய்வதையும் காணலாம்.
ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
தேவகோட்டை அருகே ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஈகரை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் அய்யனார், ஆற்றங்கரை செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குலதெய்வமாக இருந்து வருகிறது.
கோவிலில் செல்லியம்ம னுக்கு ராஜகோபுரமும், முருகன், விநாயகர், கருப்பருக்கு விமான கோபுரமும் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புதியதாக சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப் பட்டது. முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 4ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இன்று காலை 4ம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதியை தொடர்ந்து காலை 6.50 மணியளவில் சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலயத்தில் கலசங்களுக்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9 மணியளவில் கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பா பிஷேகம் நடைபெற்றது.
தென்னிலைநாடு ஈகரைசேர்கை கிராம மக்கள் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தேவ கோட்டை போலீஸ் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வாளர்கள் சரவணன், சுப்பிரமணியன், சார்பு ஆய்வாளர், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.
Next Story






