என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர்கிரைம் போலீசார்
    X
    விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர்கிரைம் போலீசார்

    பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் போலீசார்

    சைபர் கிரைம் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் விதமாக தென்காசி புதிய பஸ்நிலையத்தில் பயணிகளிடம் சைபர் கிரைம் குற்றம் குறித்த விழிப்புணர்வுகளை சைபர் கிரைம் போலீசார் ஏற்படுத்தினர்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் விதமாக சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் வழிகாட்டுதலின் படி தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சைபர் கிரைம் குற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் உள்ள பயணிகளிடம் சைபர் கிரைம் காவல்துறையினரால் ‘ப்ளூ பக்கிங்’ என்று அழைக்கப்படும் சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த ப்ளூ பக்கிங் மூலம் உங்கள் தொலைபேசியில் உள்ள ‘புளூடூத்’-ஐ குற்றவாளிகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களையும் திருடுகிறார்கள், 

    இது நடக்காமல் தடுப்பதற்கு அனைவரும் தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ கட்டாயம் ஆப் செய்யவேண்டும் எனவும், மேலும் தேவைக்கு மட்டுமே புளூடூத் மேக் போன் விசிபிள் ஐ ஆன் செய்ய வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் 155260 மற்றும் இணைய முகவரி www.cybercrime.gov.in அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    Next Story
    ×