search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்.
    X
    திருப்பூர் சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்.

    பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்

    மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மேலும் 1,159 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24,715 ஆக அதிகரித்துள்ளது. 

    மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 12,037 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 1,359 பேர் வீடு திரும்பியுள்ளனர். 

    கொரோனா நோய் தொற்றால் 1,11,636 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை 1,042 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாரந்தோறும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி, சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  

    இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆனவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 77 மையங்களில் ‘பூஸ்டர்’ சிறப்பு முகாம் நடைபெற்றது.

    மாவட்டத்தில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 600 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 1,182 சுகாதார பணியாளர், 956 முன்கள பணியாளர், 60 வயதுக்கு மேற்பட்ட 3,476 பேர் என 5,614 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×