என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் பலியான சந்திரமோகன்.
    X
    விபத்தில் பலியான சந்திரமோகன்.

    டிராக்டர் மோதி விபத்து: வாலிபர் தலை நசுங்கி பலி

    ஆப்பக்கூடல் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் தலை நசுங்கி பலியானார்.
    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் தலை நசுங்கி பலியானார்.

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி கிராமம் பொதியா மூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் தவசியப்பன். 

    இவரது மகன் சந்திரமோகன் (23). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை இவர் வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக ரெட்டிபாளையம் அந்தியூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றார் .

    அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சந்திரமோகன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து ஆப்பக்கூடல் போலீசார் விபத்தில் பலியான சந்திரமோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் டிராக்டர் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×