என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆய்வு
தேர்தல் பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு
நெற்குப்பை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து வட்டார மேற்பார்வையாளர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 3,150 நபர்களும், பெண் வாக்காளர்கள் 3,281 நபர்களும், மூன்றாம் பாலினத்தவர் 1 நபரும் என மொத்தம் 6,432 வாக்காளர்கள் இருந்து வருகின்றனர்.
இதில் 4&வது வார்டில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் போட்டியிட முடியும் என்றும், 9&வது வார்டில் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் போட்டியிடலாம் என்றும், மீதமுள்ள 10 வார்டுகளில் பொதுப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று செயல் அலுவலர் கணேசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களை போட்டியிட விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேற்று முன்தினம் முதல் பெற்று வரும் நிலையில், தேர்தல் பணிகள் நிலவரம் குறித்து தேர்தல் வட்டார மேற்பார்வையாளர் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் தேர்தல் பணிகள் நிலவரம் குறித்து செயல் அலுவலரிடம் கேட்டறிந்தார். இதில் இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






