search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம்
    X
    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம்

    சிவகங்கை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

    சிவகங்கை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிமுறை கள் மற்றும் தேர்தல் நட வடிக்கைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதுசூதன் ரெட்டி  தலைமையில் நடந்தது. 

    இதில் கலெக்டர் பேசுகையில், மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் உள்ள 117 வார்டு உறுப்பினர், கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 11 பேரூராட்சிகளில் உள்ள 168 வார்டு உறுப்பினர்கள் கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 

    இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1,63,577, பெண் வாக்காளர்கள் 1,72,527, இதரர் 13 மொத்தம் 3,36,117 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 

    வேட்பு மனு தாக்கல் இன்று(28-ந்தேதி)  தொடங்கி  வருகிற  4.2.2022 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். 

    வேட்பு மனுக்கள் ஆய்வு செய்தல் 5.2.2022 அன்று நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் 7.2.2022. வாக்குப்பதிவு நடைபெறும் நாள் 19.2.2022,  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 22.2.2022 ஆகும்.

    இந்த தேர்தலில் நன்னடத்தை விதிகளையும்,  கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திர மாகவும் மற்றும் பாதுகாப் பாகவும் நடைபெற  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    வருவாய் கோட்டாட்சியர்கள்  முத்துக்கலுவன் (சிவகங்கை),  பிரபாகரன் (தேவகோட்டை), மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப் பாளர்  வெற்றிச்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர்  ரத்தினவேல்,  கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)  லோகன் மற்றும்  தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.
    Next Story
    ×