search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட முருங்கை.
    X
    பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட முருங்கை.

    உடன்குடியில் கடும் பனிப்பொழிவால் முருங்கைக்காய் உற்பத்தி பாதிப்பு -1 கிலோ ரூ.150-க்கு விற்பனை

    உடன்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் முருங்கைக்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணிக்கு சூரியன் உதயமாகும் வரை வெள்ளை நிறபனி பொழிவு கொட்டுகிறது.

    இது மக்களை மட்டும் பாதிக்கவில்லை, விவசாயத்தை அதிகமாக பாதித்திருக்கிறது. குறிப்பாக முருங்கை விவசாயிகளை படாதபாடுபடுத்துகிறது. இந்த வெள்ளை நிறபனி முருங்கையை பூக்க விடாமல் தடுக்கிறது. பூத்தபூக்களை உதிர்த்துவிடுகிறது. இதனால் இந்த ஆண்டு முருங்கை விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் சுமார் ரூ.7 லட்சம் வரை நஷ்டமடைந்துள்ளனர்.

    ஒரு சில தோட்டங்களில் பிஞ்சுமுருங்கைகாயில் கரும்புள்ளிகள் விழுகிறது. கருப்பு நிறபுள்ளிகள் உள்ள முருங்கைகாயை வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். பச்சை நிறத்தில் பளிச்சென இருக்கும் முருங்கைக்காயை ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மற்ற முருங்கைகாய்க்கு விலை இல்லை. இதனால் முருங்கை விவசாயிகள் கடும் கவலையில் உள்ளனர்.வெள்ளை நிறபனிகாலம் முடிந்த பின்புதான் முருங்கையில் வருமானம் வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
    Next Story
    ×