என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக 2 பெண்கள் நியமனம்- சீமான் அறிவிப்பு

    நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக 2 பெண்களை நியமனம் செய்து சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியை சேர்ந்த அ.சகாய இனிதா, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியை சார்ந்த மு.சங்கீதா ஆகியோர் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    இவர்களுக்கு கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புதிதாக பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துக்கள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்று வீர்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×