search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை ரவுண்டானா பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதி

    பஸ் நிலையம் பகுதியில் தடுப்பு அமைக்கப்படாமல் ரோடுகளும் அகலப்படுத்தப்படாமல் உள்ளதால் ரவுண்டானா பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படுகிறது.
    உடுமலை;

    உடுமலை பஸ் நிறுத்தம் அருகே பழநிரோடு, பொள்ளாச்சி ரோடு, ராஜேந்திரா ரோடு, பைபாஸ் ரோடு மற்றும் அனுஷம் ரோடு, ஐஸ்வர்யா நகர் ரோடுகள் சந்திக்கும் பகுதியில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் ரூ.1.5 கோடி செலவில் சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைக்கப்பட்டது.

    இத்திட்டத்தில் பஸ் நிலையம் பகுதியில் தடுப்பு அமைக்கப்படாமல் ரோடுகளும் அகலப்படுத்தப்படாமல் உள்ளதால் ரவுண்டானா பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கல் ஏற்படுகிறது.

    மேலும் பொள்ளாச்சி பஸ்கள், கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் பைபாஸ் ரோட்டில் வரும் வாகனங்கள் தெரியும் வகையில், பஸ் நிறுத்தம் நிழற்கூரை மற்றும் சுற்றுச்சுவர் அகற்றப்படாததால், பைபாஸ் ரோட்டில் கிழக்கு நோக்கி வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.

    இப்பகுதியில் கடைகள், தள்ளுவண்டி கடைகளும் ஆக்கிரமித்துக்கொள்வதால் ரவுண்டானா திட்டம்  பயன்படாமல், மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

    எனவே போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீசார் முறையாக ஆய்வு செய்து ரவுண்டானாவை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×