search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்காசி மாவட்டத்தில் 24-ந்தேதி முதல் கலைஞர் வீட்டு வசதி திட்ட கணக்கெடுப்பு

    தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமத்திலும் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வருகிற 24-ந்தேதி முதல் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2010-ம் ஆண்டின் கலைஞர் வீட்டு வசதி திட்டம் திட்ட கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு, குடிசை வீடுகளில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் மறு கணக்கெடுப்பு வருகிற 24-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 221 கிராம ஊராட்சிகளில் நடை பெறவுள்ளது.

    முதற்கட்டமாக ஏற் கனவே கலைஞர் வீட்டு வசதி திட்டம் 2010 கணக்கெடுப்பில் கீழ் குறிப்பிட்டவாறு கண்டறியப்பட்ட மொத்தம் 3288 பயனாளிகள் செயலி மூலமும், கணக்கெடுப்பு நேரடி கள ஆய்வு மூலமும் மேற்கொள்ளப்படவுள்ளது.

    ஆலங்குளம் ஒன்றியம்356 குடிசை வீடுகளும், கடை யம் ஒன்றியம் 359 குடிசை வீடுகளும், கடையநல்லூர் ஒன்றியம் 178 குடிசை வீடு களும், கீழப்பாவூர் ஒன்றியம் 123 குடிசை வீடுகளும், குருவிகுளம் ஒன்றியம் 207 குடிசை வீடுகளும், மேலநீலிதநல்லூர் ஒன்றியம் 242குடிசை வீடுகளும், சங்கரன்கோவில் ஒன்றியம் 336 குடிசை வீடுகளும், செங்கோட்டை ஒன்றியம் 224 குடிசை வீடுகளும், தென்காசி ஒன்றியம் 299 குடிசை வீடுகளும், வாசுதேவநல்லூர் 964 குடிசை வீடுகளும் என மொத்தம் 221 கிராம ஊராட்சிகளில் 3288 குடிசை வீடுகள் உள்ளன.

    கள ஆய்வுப் பணியில் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் செயலர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்பணியில் உயர் அலுலர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு செய்யப்படவுள்ளது. 

    எனவே, பயனாளிகள் கலைஞர் வீட்டு வசதி திட்டம் கணக்கெடுப்பு மூலம் பயன்பெற தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற சான்றிதழ் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும், கணக்கெடுப்பு பணி யில் முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இத்தகவலை கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ளார்.
    Next Story
    ×