என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு பூஜைகள் நடந்த காட்சி.
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் தைப்பூச சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் தைப்பூச சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி காலை 10 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், ஆனந்தவல்லி, கோவில் பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
Next Story