என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
தூத்துக்குடியில் ஆட்டோ கண்ணாடி உடைப்பு-ஒருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூரை சேர்ந்த டிரைவரை தாக்கி, அவரது ஆட்டோ கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் தங்க முத்துவேல் (வயது 23). இவரும் அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (23) என்பவரும் உறவினர்கள்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு செல்வகுமார், தங்க முத்துவேலுக்கு சொந்தமான ஆட்டோவில் அமர்ந்துகொண்டு மது அருந்தி உள்ளார். இதை பார்த்த தங்க முத்துவேல் சத்தம் போட்டுள்ளார். இதன் காரணமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 13-ந்தேதி சிவகுமார், தங்க முத்துவேலிடம் தகராறு செய்து அவரை கையால் தாக்கி, அவரது ஆட்டோ கண்ணாடியையும் உடைத்து விட்டு கொலைமிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து தங்க முத்துவேல் அளித்த புகாரின் பேரில் எப்போதும் வென்றான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தார்.
இவர் மீது ஏற்கனவே எப்போதும் வென்றான் போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






