என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  வீரவநல்லூரில் மில் தொழிலாளிக்கு மிரட்டல்-ஒருவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீரவநல்லூர் அருகே உள்ள கிளாக்குளத்தில் தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி மில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
  நெல்லை:

  வீரவநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் திருமலையப்பன் (வயது 55). இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

  கிளாக்குளத்தை சேர்ந்த சுடர்மணி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருமலையப்பன் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

  இந்தநிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் திருமலையப்பனை சந்தித்து, “கொலை வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது” என்று மிரட்டி வந்துள்ளார்.

  இந்த நிலையில் நேற்று திருமலையப்பன் மில்லில் வேலை செய்துகொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த இசக்கிமுத்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். திருமலையப்பன் தப்பியோடி உயிர்பிழைத்தார்.

  இதுகுறித்து அவர் வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தனர்.
  Next Story
  ×