என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  களக்காடு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  களக்காடு அருகே உள்ள ராஜபுதூர்-கொடுமுடியாறு அணைக்கு செல்லும் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையின்போது கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  களக்காடு:

  திருக்குறுங்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கோபாலலிங்கம் மற்றும் போலீசார் ராஜபுதூர்- கொடுமுடியாறு அணைக்கு செல்லும் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந் தனர். 

  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி முயன்றனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். 

  அப்போது 2 பேரும் போலீ சாரை அவதூறாக பேசி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர். எனினும் போலீசார் 2 பேரையும் பிடித்தனர். 

  தொடர்ந்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் 370 கிராம் கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. 

  விசாரணையில் அவர்கள் மகிழடி நடுத்தெருவை சேர்ந்த அன்னராஜா (45), மேலமாவடியை சேர்ந்த ஜெயக்குமார் (46) என்பது தெரியவந்தது. 

  மேலும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். 

  அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
  Next Story
  ×