search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் நமச்சிவாயம்
    X
    அமைச்சர் நமச்சிவாயம்

    புதுச்சேரியில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படுமா?- அமைச்சர் நமச்சிவாயம் பதில்

    புதுச்சேரியில் அசுர வேகத்தில் கொரோனா பரவுவதால் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதேநேரத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 19-ந்தேதி முதல் திருப்புதல் தேர்வும் தொடங்கும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் வருகிற 31-ந்தேதி வரை 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற 19-ந்தேதி தொடங்க உள்ள திருப்புதல் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி பாடத்திட்டத்தை பொறுத்தவரை தமிழக பாடத்திட்டமே பின்பற்றப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி புதுவையிலும் கொரோனா தொற்று பரவல் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

    இதற்கிடையே மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பெற்றோரிடம் அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இதற் கிடையே ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

    இந்தநிலையில் புதுவையில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுமா? என்று கல்வித்துறை பொறுப்பு வைக்கும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பள்ளி மாணவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 40 சதவீத மாணவர்கள் தடுப்பூசி போடவில்லை.

    பள்ளிகள் நடந்தால் தான் அவர்களுக்கு தடுப்பூசி போட முடியும். எனவே நேரடி வகுப்புகளை ரத்து செய்வது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
    Next Story
    ×