என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  அம்பையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்பை அருகே உள்ள மன்னார்கோவிலில் வாலிபரை வழிமறித்து ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  வி.கே.புரம்:

  அம்பை அருகே உள்ள மன்னார்கோவில் வெயிலான் தெருவை சேர்ந்தவர் பொன்னுமணி (வயது23). இவர் நேற்று மன்னார்கோவில் விலக்கு பகுதியில்  வந்தபோது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது.

  சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அரிவாளால் பொன்னுமணியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

  இதில் பலத்த காயம் அடைந்த பொன்னுமணியை  அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  தகவலறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.  அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக அம்பை  டி.எஸ்.பி.  பிரான்சிஸ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

  இந்தநிலையில் பொன்னு மணியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்ற அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் (42), முருகன் (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை  வலைவீசி தேடி வருகின்றனர்.

  முன்விரோதம் காரணமாக பொன்னுமணியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று போலீசார் 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×