என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்தில் பலியான பெருமாள்சாமி, திருஞானம், பூபேஸ்
  X
  விபத்தில் பலியான பெருமாள்சாமி, திருஞானம், பூபேஸ்

  தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து- நண்பர்கள் 3 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் நண்பர்கள் 3 பேர் பலியானதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  தொப்பூர்:

  தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி (வயது 29)., திருஞானம்(26), பூபேஸ்(30).

  நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சனிசந்தை பகுதியில் இருந்து பாளையம்புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பாளையம் புதூர் பிரிவு ரோடு பகுதியை கடக்க முயற்சி செய்தபோது, சேலத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பெருமாள்சாமி, திருஞானம் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பலத்த காயம் அடைந்த பூபேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூபேஸ் இறந்தார்.

  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாளையம் புதூர் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இந்த விபத்திற்கு காரணம் சனிசந்தையில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் கூறி திடீரென தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  இதுபற்றி தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  Next Story
  ×