என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பூக்கள் விலை அதிகரிப்பு
  X
  பூக்கள் விலை அதிகரிப்பு

  கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு- பூக்கள் விலை அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் இன்று அதிகாலை முதல் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.
  போரூர்:

  பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையில் கரும்பு, மஞ்சள் முக்கிய இடம் பிடிக்கும்.

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் இன்று அதிகாலை முதல் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, மஞ்சள் வாழைத்தார், பூ, சிறுகிழங்கு, மொச்சைக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  இதேபோல் புதுவண்ணாரப்பேட்டை, பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, அயனாவரம், வடபழனி, தண்டையார் பேட்டை, போரூர் மார்க்கெட் வீதிகளிலும் விற்பனை களைகட்டி உள்ளது. பொங்கல் பண்டிகை வழிபாட்டுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.

  கொரோனா அச்சுறுத்தல் காரணமான பழைய வியாபாரம் இல்லை என்று பெரும்பாலான வியாபாரிகள் தெரிவித்தனர்.

  கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் விலை விபரம் வருமாறு:-

  ஒரு கட்டு கரும்பு (20 எண்ணிக்கை) ரூ.150 முதல் ரூ.350 வரை, மஞ்சள் கொத்து ரூ.50, இஞ்சி கொத்து கட்டு ரூ.50, மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரூ.400, தேங்காய் கிலோ ரூ.35, பிடிகருணைக்கிழங்கு (கிலோ) ரூ.40, கார கருணைக்கிழங்கு ரூ.40, வெற்றிலைவள்ளி கிழங்கு ரூ.60, சிறுகிழங்கு ரூ.70, மொச்சைக்காய் ரூ.80, துவரங்காய் ரூ.80, சர்க்கரைவள்ளி கிழங்கு ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  இதேபோல் பூக்கள் விலையும் அதிகரித்து உள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது. மார்க்கெட்டில் பூக்கள் விலை விபரம் வருமாறு:-

  மல்லிப்பூ (கிலோ) ரூ.2-ஆயிரம், ஜாதி-ரூ.1200, சாமந்தி பூ -ரூ.140, வெள்ளை சாமந்தி பூ-ரூ.160, பன்னீர் ரோஸ்-ரூ.160க்கும் விற்பனை ஆகிறது.


  Next Story
  ×