search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தொழிலாளர் பதிவு விண்ணப்ப குறைபாடுகளை சரிசெய்ய வாய்ப்பு

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கட்டுமான மற்றும் தொழிலாளர் நலவாரியத்தில் சேர பதிவு செய்தவர்களுக்கான விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை கலெக்டர் விஷ்ணு, தென்காசி கலெக்டர் கோபாலசுந்தரராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

    தற்போது அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவுபெற்ற உறுப்பினர்களின் குழந்தைகள் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை கல்வி பயின்றால் அவர்களுக்கு உதவி தொகை வழங்க கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.

    மேலும் 19.6.2020 முதல் முன்பதிவு கோரும் விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டு உடனுக்குடன் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

    இணையதளம் மூலமாக பதிவு கோரி விண்ணப்பித்த மனுக்களில் குறைபாடுகள் காரணமாக திருப்பப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் குறைபாடுகளை சரிசெய்து இணையதளத்தில் சமர்ப்பிக்கும்பட்சத்தில், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக அடையாள அட்டை வழங்குவதற்கு ஏதுவாக குறைபாடுகள் காரணமாக திருப்பப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் உடனடியாக சரி செய்து இணையதளத்தில் சமர்ப்பித்து அடையாள அட்டை பெற்று நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் அடையலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×