என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  களக்காட்டில் பாம்பு கடித்து பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  களக்காடு அருகே உள்ள படலையர்குளத்தில் வயலுக்கு சென்ற இடத்தில் பாம்பு கடித்து பெண் பலியானார்.
  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள படலையார்குளம், கீழத் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி அரசம்மாள் (50).

  கடந்த 9-ந்தேதி களக்காடு மின்சார நிலையம் அருகே உள்ள வயல் பகுதியில் தனது வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளுக்கு செடி- கொடிகளை பறித்துக் கொண்டிருந்தார்.  

  அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனைதொடர்ந்து உறவினர்கள் அவரை களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

  அதன் பின்னர் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

  இந்நிலையில் அரசம்மாள் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுபற்றி அவரது மகன் சுடலைக்கண்ணு (27) களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×