என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  தூத்துக்குடியில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

  திருவள்ளுவர் தினமான நாளை (15-ந் தேதி), வள்ளலார் தினமான  18-ந் தேதி மற்றும் குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி ஆகிய 3 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  அப்போது  அதனுடன் இணைந்த  அனைத்து பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

  மேற்கண்ட நாட்களில் மதுவிற்பனை, மதுவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், முதவை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

  Next Story
  ×