என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பாலக்கோடு அருகே நகையை திருடிய வாலிபர் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியில் கூலித்தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே வாழைத்தோட்டம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாதையன்.
இவர் கடந்த 7-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த அரை பவுன் தங்க தோடு திருடி சென்றனர். இது குறித்து மாதையன் மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.
விசாரனையில் தர்மபுரி அருகே கொட்டாய்மேடு பகுதியை வேடியப்பன் மகன் அருண்குமார் (வயது 23) என்பவர் திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை கைது செய்து அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்த போலீசார் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story