என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பிணமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவர்கள் பரணிதரன், சரண்சஞ்சய்.
  X
  பிணமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவர்கள் பரணிதரன், சரண்சஞ்சய்.

  திருப்பூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்கள் பிணமாக மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கால்வாயில் நண்பர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது, பரணிதரன், சரண்சாய் ஆகிய இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் காங்கேயம் ரோடு குருநாதகவுண்டர் வீதியைச் சேர்ந்த ஹரிதாஸ் இவரது மகன் பரணிதரன் (15). திருப்பூர் செரங்காடு ஆர்.கே., கார்டனை சேர்ந்த டார்ஜன் என்பவரது மகன் சரண்சஞ்சய், (16). இருவரும் திருப்பூர் கே.எஸ்.சி, மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். 

  சம்பவத்தன்று மாலை நண்பர்கள் ஆறு பேருடன், ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் குளிக்க சென்றனர். கால்வாயில் நண்பர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, பரணிதரன், சரண்சாய் ஆகிய இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இருவரையும் நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. 

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள பொது மக்களுக்கும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவிநாசிபளையம் போலீசார் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் வாய்க்காலில் மாயமான மாணவர் களது உடல்களைத் தேடி வருகின்றனர். 

  நேற்று இரவு நீண்ட நேரம் தேடி பார்த்து இரண்டு பேரும் கிடைக்கவில்லை தொடர்ந்து இன்று 2-வது நாளாக வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்களை தேடி வந்தனர்.

  இந்தநிலையில் வெள்ளகோவில் அருகே தண்ணீரில் அடித்துசெல்லப்பட்ட 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×