search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    முத்துப்புதூர் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி

    குழந்தைகளுக்கு பாட்டு பாடியும், நடனம் ஆடியும் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
    திருப்பூர்:

    திருப்பூர் முத்துப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ‘இல்லம் தேடி கல்வி’ நிகழ்ச்சி தொடங்கியது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். 

    தட்டான் தோட்டம், குப்பண்ண செட்டியார் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி மற்றும் எம்.ஜி., புதூர் பகுதியில் இருக்கும் மாணவர்களுக்காக தட்டான் தோட்டத்தில் இரு மையங்கள், எம்.ஜி., புதூரில் ஒரு மையம் என அப்பகுதியில் 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து முத்துப்புதூர் பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு செல்வி கூறியதாவது:

    மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைப்பதற்காகவும், கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும் கலைத்திறனை வளர்ப்பதற்காகவும் இம்மையங்கள் செயல்படுகிறது. ஒரு மையத்திற்கு 20 பேர் வீதம் தலா ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    குழந்தைகளுக்கு பாட்டு பாடியும், நடனம் ஆடியும் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. மாணவர்களின் நலன் கருதி இருட்டு சூழ்வதற்குள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×