என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    இரவுநேர ஊரடங்கை மீறியதாக 3 ஓட்டல்கள் மீது வழக்குப்பதிவு

    ஈரோட்டில் இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்த 3 ஓட்டல்கள் மீதும், வாகனங்களில் சுற்றி திரிந்த 3 வாகன ஓட்டிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்த 3 ஓட்டல்கள் மீதும், வாகனங்களில் சுற்றி திரிந்த 3 வாகன ஓட்டிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த  கடந்த  6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள 14 சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய வாகனங்களை தவிர்த்து, பிற வாகனங்களை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

    இதேபோல் இரவு 10 மணிக்கு மேல்கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள், மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர் பகுதியில் இரவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஊரடங்கினை மீறி செயல்பட்ட 3 ஓட்டல்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் தொடர்ந்து ஊரடங்கினை மீறினால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

    இதேபோல், ஊரடங்கினை மீறி இரவு நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் சுற்றிதிரிந்ததாக 3 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×