என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படுக்கைகள் (கோப்பு படம்)
    X
    படுக்கைகள் (கோப்பு படம்)

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் தயார்- கலெக்டர் ஆய்வு

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற வசதியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

    நேற்று மட்டும் புதிதாக 816 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்துள்ளார். நோய் தொற்று பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற வசதியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

    இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×