என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வாக்காளர் இறுதி பட்டியலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலைய
  X
  வாக்காளர் இறுதி பட்டியலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலைய

  ஈரோடு மாவட்டத்தில் 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 வாக்காளர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
  ஈரோடு:

  ஈரோடு மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

  தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த ஆண்டு  மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி 1-ந் தேதி வாக்காளராகும் தகுதி நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் 2 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

  இந்நிலையில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும், ஏற்கனவே பதிவு செய்திருந்த வாக்காளர்கள் தங்கள் பெயரில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும் முகவரி  மாற்றியவர்கள் அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.  

  இந்நிலையில் வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்  நிகழ்ச்சி நடந்தது. 

  நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தலைமை தாங்கி  அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  அதனை ஆர்.டி.ஓ. பிரேமலதா பெற்றுக்கொண்டார்.

  ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

  மாவட்டம் முழுவதும் 1.11.2021-படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 66 ஆயிரத்து 546 ஆகும்.   புதிதாக 31 ஆயிரத்து 170 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 472 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  5.1.2022-ன் படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 65 ஆயிரத்து 616 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 21 ஆயிரத்து 499 பேர் உள்ளனர். பிற வாக்காளர்கள் 129 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

  வாக்காளர் இறுதி பட்டியலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
  Next Story
  ×