search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு வழங்க ரேஷன்கடைகளுக்கு கொண்டு வரப்பட்ட கரும்பு.
    X
    பொதுமக்களுக்கு வழங்க ரேஷன்கடைகளுக்கு கொண்டு வரப்பட்ட கரும்பு.

    ரேஷன் கடைகளுக்கு வந்த பொங்கல் பரிசு தொகுப்பு

    பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு கரும்பு உள்பட 21 வகையான பொங்கல் தொகுப்பு கொண்டு வரப்பட்டு தயாராக வைக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு கரும்பு உள்பட 21 வகையான பொங்கல் தொகுப்பு கொண்டு வரப்பட்டு தயாராக வைக்கப்பட்டு உள்ளது.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

    பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்பட 21 பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை சென்னையில் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் ரேஷன் கார்டுகள் 1381 என மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21  பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 

    இதற்காக கடந்த சில நாட்களாக ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகித்து வருகின்றனர். அந்தந்த ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு கட்டுகளும் வந்துள்ளது. 

    கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடாத வகையில் டோக்கன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்பட உள்ளன. 

    வரும் 31-ந் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×