என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  தெள்ளாரில் வாகனம் மோதி பெண் தொழிலாளி உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெள்ளாரில் சரக்கு வாகனம் மோதி துப்புரவு பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.
  வந்தவாசி:

  வந்தவாசியை அடுத்த தெள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன். அவரது மனைவி சிவகாமி (வயது 33). இவர், தெள்ளார் ஊராட்சியில் தினக்கூலியாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

  நேற்று முன்தினம் வந்தவாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகாமி, அவரது கணவர் மாயக்கண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

  புதுவணக்கம்பாடி மாரியம்மன் கோவில் எதிரில் சென்றபோது, தெள்ளார் நோக்கி வந்த சரக்கு வாகனமும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டன. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

  உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகாமி மட்டும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதுகுறித்து தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து, கூட்டேரிப்பட்டை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் காளிதாஸ் என்பவரை கைது செய்தனர்.
  Next Story
  ×