search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டதாக செல்போனுக்கு தகவல் வந்தால் புகார் தெரிவிக்கலாம்

    தடுப்பூசி செலுத்தக் கூடியவர்களின் செல்போன் எண் சான்றிதழ் வழங்குவ தற்காகவும், எந்த தேதியில் முதல் தவணை, 2-ம் தவணை செலுத்தப்பட்டது போன்ற விவரங்கள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. இதுவரையில் 7 கோடியே 17 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

    தடுப்பூசி இதுவரையில் போட்டுக் கொள்ளாதவர்கள் விரைவாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில் ஒரு சிலருக்கு தடுப்பூசி போடாமலேயே போட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து இதுபோன்ற தவறு எப்படி நடக்கிறது என்பதை சுகாதாரத்துறை ஆய்வு செய்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

     

    கொரோனா வைரஸ்

    அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள 46 சுகாதார மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற தவறுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர்.செல்வ விநாயகம் கூறியதாவது:-

    தடுப்பூசி போடதாவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக ஒரு சிலருக்கு தகவல் வந்ததாக சுகாதாரத் துறையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தவறு எப்படி நடந்தது என்று ஆய்வு செய்யப்பட்டது.

    செல்போன் நம்பரை பதிவு செய்யும் போது தவறுதலாக ஒரு எண்ணை மாற்றி பதிவு செய்ததால் இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டதாக தெரிகிறது.

    தடுப்பூசி செலுத்தக் கூடியவர்களின் செல்போன் எண் சான்றிதழ் வழங்குவ தற்காகவும், எந்த தேதியில் முதல் தவணை, 2-ம் தவணை செலுத்தப்பட்டது போன்ற விவரங்கள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது. அதே போல தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களுக்கும் இந்த செல்போன் வழியாக குறுஞ் செய்தியாக அனுப்பப்படுகிறது.

    ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால், 5 பேரும் ஒரே எண்ணை கொடுக்கலாம். 4 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கலாம். ஒருவர் போடாத நிலையில் அவருக்கும் தவறான பதிவால் தடுப்பூசி போட்டதாக தகவல் சென்று விடுகிறது.

    இது முகாம்களில் தற்காலிக ஊழியர்கள் பதிவு செய்யும் போது கவனக் குறைவால் ஏற்படுகிறது. 7 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியதில் 4 அல்லது 5 பேருக்கு இதுபோன்ற தவறான தகவல் சென்றுள்ளது.

    இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் 46 சுகாதார மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு அவர்களின் செல்போன் எண்கள் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல், செலுத்திக் கொண்டதாக யாருக்கேனும் தகவல் வந்தால் அவர்கள் உடனடியாக கீழ்கண்ட எண் களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

    சில களப்பணியாளர்கள் செய்கின்ற தவறுகள் இனி நடைபெறாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்டம் வாரியாக புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் விவரம்:-

    அறந்தாங்கி- 9442962738
    அரியலூர்- 9865177416
    ஆத்தூர்- 9787117030
    சென்னை- 9941491164
    செய்யாறு- 9500659593
    கோயம்புத்தூர்- 9894338846
    செங்கல்பட்டு- 9751487318
    கடலூர்- 9443737905
    தர்மபுரி- 9790284264
    திண்டுக்கல்- 8754541244
    ஈரோடு- 9894338846
    கள்ளக்குறிச்சி- 9443737905
    காஞ்சிபுரம்- 9751487318
    கரூர்- 8012015540
    கோவில்பட்டி- 9092280164
    கிருஷ்ணகிரி- 9488091641
    மதுரை-9244861327
    மயிலாடுதுறை- 7904821308
    நாகப்பட்டினம்- 7904821308
    நாகர்கோவில்- 9791582914
    நாமக்கல்- 9994724455
    பழனி- 9843557724
    பரமக்குடி- 9994051625
    பெரம்பலூர்- 9443835677
    பூந்தமல்லி- 7708991059
    புதுக்கோட்டை- 9443046324
    ராமநாதபுரம்- 9994051625
    ராணிப்பேட்டை- 8754224556
    சேலம்- 9842946703
    தென்காசி- 8248722957
    சிவகங்கை- 9442106748
    சிவகாசி- 9500925440
    தஞ்சாவூர்- 9865177416
    தேனி- 9894887136
    திருவள்ளூர்- 7708991059
    திருவாரூர்- 9442456080
    திருச்சி- 9944842742
    திருநெல்வேலி- 9442126179
    திருப்பத்தூர்- 9842433364
    திருப்பூர்- 9677447084
    திருவண்ணாமலை- 7299384974
    தூத்துக்குடி- 9092280164
    ஊட்டி- 9585018777
    வேலூர்- 9952827303
    விழுப்புரம்- 9865552258
    விருதுநகர்- 9500925440

    Next Story
    ×