search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைநீர் தேங்கிய பகுதிகளில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்த காட்சி
    X
    மழைநீர் தேங்கிய பகுதிகளில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்த காட்சி

    மழை பாதிப்பு: அரசு அதிகாரிகளுடன் இணைந்து தி.மு.க.வினர் நிவாரண பணி செய்யுங்கள் - மு.க.ஸ்டாலின்

    நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்குப் பருவமழையையொட்டி முன் கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறேன்.

    அமைச்சர்களும் இதுபோன்ற நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வீடுகளில் மழைநீர் தேங்கி இருப்பதை படத்தில் காணலாம்

    இந்நிலையில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மக்களின் இன்னல்களைப் போக்கிட தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க.வினர் உதவ வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    Next Story
    ×