என் மலர்

    செய்திகள்

    மிரட்டல்
    X
    மிரட்டல்

    உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம்: விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் பூட்டை சாலையை சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 46), விவசாயி. இவருக்கும் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணு மகன் செல்வமணி (46) என்பவருக்கும் இடையே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று செல்வமணி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செல்போனில் செங்குட்டுவனை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார், 11 பேர் மீது வழக்குப்பதிந்து, செல்வமணியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×