search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைத்திலிங்கம் எம்.பி.
    X
    வைத்திலிங்கம் எம்.பி.

    வைத்திலிங்கம் எம்.பி.க்கு கொரோனா

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான வைத்திலிங்கம், புதுவை கந்தப்பமுதலியார் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    வைத்திலிங்கம் எம்.பி.க்கு நேற்று முன்தினம் 71-வது பிறந்தநாள். தனது பிறந்த நாளில் புதுவை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் அவர் சந்தித்தார்.

    இந்த நிலையில் நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    பரிசோதனையில் வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×