என் மலர்
செய்திகள்

சபாநாயகர் அப்பாவு
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினரை வெளியேற்றவில்லை- சபாநாயகர் விளக்கம்
ஜனநாயக முறைப்படி சபையை நடத்த வேண்டும். பேரவையின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் எண்ணம் ஆகும்.
சென்னை:
தமிழக சட்டசபை இன்று கூடியதும் அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து பேசினார்.
அவர் பேசுகையில், ‘தமிழக சட்டசபையில் நேற்று ஒரு விவகாரம் தொடர்பாக பெரும் பிரச்சினை ஏற்பட்டு அதன் முடிவு என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சில பத்திரிகைகளில் தமிழக சட்டசபையில் கூச்சல் குழப்பம், அ.தி.மு.க.வினர் வெளியேற்றம் என்று செய்தி வெளியாகி உள்ளது.
அவர்களாக வெளியேறியதை, வெளியேற்றியதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள். பத்திரிகைகள் செய்தி வெளியிடும்போது கவனமுடன் இருக்க வேண்டும், அதற்கு நீங்கள் (சபாநாயகர்) உரிய அறிவுரை வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எழுந்து ஒரு பிரச்சினையை எழுப்ப முயன்றார். எனது அனுமதி பெறாமல் அதுபோன்று செயல்பட்டது தவறான நடைமுறை என்று கூறி அவரை இருக்கையில் அமர சொன்னேன்.
அந்த நேரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு நிமிடம் பேசுவதற்கும் வாய்ப்பு அளித்தேன். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினையையே பேசினார். தனிப்பட்ட பிரச்சினையை அவையில் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தும் அவர் அதை ஏற்கவில்லை.
ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த உறுப்பினர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பேப்பரை காட்டினார்கள். அப்படி செய்வது அவையின் மாண்புக்கு களங்கம் விளைவிக்கக்கூடியது என்று கூறி அமர சொன்னேன்.
அவையில் எதை செய்தாலும் எனது அனுமதியின்றி செய்யக்கூடாது என்று தெரிவித்ததுடன், முதல்-அமைச்சர் பதில் சொல்வார். அனைவரும் அமருங்கள் என்று கூறி நான் எழுந்து நின்றேன். நான் எழுந்து நின்றால் சபை உறுப்பினர்கள் அமர வேண்டும். இது போன்ற மரபுகள் எல்லாம் எதிர்க்கட்சி தலைவருக்கும் தெரியும்.
ஜனநாயக முறைப்படி சபையை நடத்த வேண்டும். பேரவையின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் எண்ணம் ஆகும். இந்த நேரத்தில் நான் அவர்களை வெளியேற்றவில்லை. அவர்களாகவே வெளியேறினார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் காலங்களில் பத்திரிகைகள் செய்தி வெளியிடும்போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story