search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெம்டெசிவிர் மருந்து
    X
    ரெம்டெசிவிர் மருந்து

    தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இணைய வழியில் ரெம்டெசிவிர் மருந்து வழங்குவது நிறுத்தம்

    தனியார் ஆஸ்பத்திரிகளில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை குறைந்துள்ளது. 90 சதவீதம் இந்த மருந்தை பயன்படுத்துவது குறைந்துவிட்டது.
    சென்னை:

    கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது ரெம்டெசிவிர், டோஸிலிசுமேப் மருந்துகளின் தேவை பல மடங்கு அதிகரித்தது.

    இந்த மருந்துகளை வாங்குவதற்காக நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் அலைமோதினார்கள். இதையடுத்து ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டது. இங்கு தினமும் மருந்து வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர். எனவே முன்னதாகவே டோக்கன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

    கொரோனா வைரஸ்

    என்றாலும் ரெம்டெசிவிர் தேவை அதிகரித்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, நேரு விளையாட்டு அரங்கத்திலும் ரெம்டெசிவிர் விற்பனை மையம் தொடங்கப்பட்டது.

    இதையடுத்து, 6 மாவட்டங்களில் இதன் விற்பனை விரிவுபடுத்தப்பட்டது.

    இதன்பிறகும் கூட்ட நெரிசல் குறையவில்லை. எனவே தனியார் ஆஸ்பத்திரிகள் ரெம்டெசிவிர் மருந்தை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகள் ரெம்டெசிவிர் மருந்தை பெற்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் இணையதள பக்கத்தில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகள் அரசு மருந்து கிடங்கில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை ஆன்லைன் மூலம் பெறும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது, தனியார் ஆஸ்பத்திரிகளில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை குறைந்துள்ளது. 90 சதவீதம் இந்த மருந்தை பயன்படுத்துவது குறைந்துவிட்டது.
    எனவே தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இணைய வழி சேவை மூலம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் நடைமுறை வருகிற 17-ந் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. மருந்து தேவைப்பட்டால் அரசு மருந்து கிடங்குகளில் நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Next Story
    ×