என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வேலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது மினிலாரி மோதியதில் வாலிபர் பலி

    வேலூர் அருகே சந்தனகொட்டாய் என்ற பகுதியில் சென்றபோது, அந்த வழியாக எதிரே வந்த ஒரு மினிலாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    வேலூர்:

    ஆரணி தாலுகா விலை கிராமம் பிள்ளையார் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 44). இவரது மகன் சந்துரு. இவரின் உறவினர் பெண் ஒருவருக்கு வேலூர் பாகாயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

    குழந்தையை பார்க்க சந்துரு நேற்று முன்தினம் பாகாயம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றார். வேலூர் அருகே சந்தனகொட்டாய் என்ற பகுதியில் சென்றபோது, அந்த வழியாக எதிரே வந்த ஒரு மினிலாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே சந்துரு தூக்கி வீசப்பட்டு பலியானார்.

    இந்த விபத்து குறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×