என் மலர்
செய்திகள்

முககவசம்
போளூர் பகுதியில் முககவசம் அணியாத 82 பேருக்கு அபராதம்
சமூக விலகலை கடைப்பிடிக்காத 4 கடைகாரர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். மொத்தம் ரூ.18,400 அபராதத்தொகையை வசூல் செய்தார்கள்.
போளூர்:
போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், தரணி, சிவகுமார் மற்றும் போலீசார் போளூர் டவுன் மற்றும் போலீஸ் எல்லையில் உள்ள 55 கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 13-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 6 நாட்களில் முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என 82 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் சமூக விலகலை கடைப்பிடிக்காத 4 கடைகாரர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். மொத்தம் ரூ.18,400 அபராதத்தொகையை வசூல் செய்தார்கள்.
Next Story






