என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அருப்புக்கோட்டையில் அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்: கடை உரிமையாளர்கள் கைது

    தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய கடை பஜார், காசுக்கடை பஜார் மற்றும் சந்திவீரர் தெருக்களில் உள்ள சில கடைகளில் குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக அருப்புக்கோட்டை நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட ரூ.2,73,600 மதிப்பிலான 256 கிலோ குட்கா மற்றும் ரூ.27 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் ராஜேந்திரன், கண்ணன், முத்துமுருகன், நவநீதன், பாக்கியராஜ், சிவராமன் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×