என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  வடமதுரை அருகே பால் வியாபாரியுடன் கல்லூரி மாணவி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடமதுரை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பால் வியாபாரியுடன் கல்லூரி மாணவி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
  வடமதுரை:

  வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டியை சேர்ந்த கண்ணன் மகள் ரமணா (வயது 19). இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற ரமணா, அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தனது மகளை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

  இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தார். இதற்கிடையே ரமணா, அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரியான மணிகண்டன் (24) என்பவரை திருமணம் செய்து கொண்டு வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டனும், ரமணாவும் காதலித்து வந்ததும், அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செய்துகொண்டு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

  இதைத்தொடர்ந்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் காதலர்கள் 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழுமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
  Next Story
  ×