என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கைது
திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது
By
மாலை மலர்18 Feb 2021 11:45 AM GMT (Updated: 18 Feb 2021 11:45 AM GMT)

திருப்பூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வீரபாண்டி:
திருப்பூர்-மங்கலம் சாலை பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). கூலி தொழிலாளி. இவர் 10 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த விவரத்தை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் மத்திய போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். போலீசார் வேலுச்சாமியை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மத்திய போலீசார், வேலுச்சாமியை திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வேலுச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதற்கிடையில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்ய தாமதம் ஆனது குறித்து குணசேகரன் எம்.எல்.ஏ., போலீசாரிடம் கேட்டறிந்தார். ஆன்லைன் சர்வர் பிரச்சினையால் வழக்குப்பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைவாக வழக்குப்பதிவு செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Next Story
×