என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
அதிமுக
விழுப்புரத்தில் 28-ந்தேதி அ.தி.மு.க.வின் பிரமாண்ட தேர்தல் பிரசார மாநாடு
By
மாலை மலர்18 Feb 2021 5:50 AM GMT (Updated: 18 Feb 2021 5:50 AM GMT)

அ.தி.மு.க. சார்பில் பிரமாண்டமாக மாநில மாநாடு வருகிற 28-ந்தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார்படுத்தப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தலிலும் இதே கூட்டணி தொடருவது உறுதியாகி விட்டது.
பா.ஜனதா கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டது. மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் நிலையில் அ.தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு அவர் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.
இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் பிரமாண்டமாக மாநில மாநாடு வருகிற 28-ந்தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார்படுத்தப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
மாநாட்டில் லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டுவதற்காக அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே 1998-ல் நெல்லையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அந்த கட்சியின் வெள்ளி விழா மாநாடுதான் அ.தி.மு.க. வெற்றிக்கு திருப்பு முனையாகவும் அமைந்தது. அதே போல் தேர்தலையொட்டி நடத்தப்படும் இந்த மாநாடும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 28-ந்தேதி தமிழகம் வருகிறார். ஊட்டி ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதைத் தொடர்ந்து தேர்தல் பிரசார கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் வகையில் அவரது பயணத் திட்டம் வகுக்கப்படுகிறது. விழுப்புரத்தில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.
அமித்ஷா வருகை உறுதியாகி இருக்கும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் பங்கேற்க வைத்து தேர்தல் பிரசார கூட்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. மாநில மாநாட்டில் அகில இந்திய தலைவர் பங்கேற்பது புதிதல்ல. ஏற்கனவே நெல்லையில் நடைபெற்ற மாநாட்டில் எல்.கே.அத்வானி பங்கேற்றுள்ளார். அந்த வகையில் இப்போது அமித்ஷாவும் பங்கேற்கிறார்.
கூட்டணி தலைவர்கள் அனைவரையும் பங்கேற்க செய்யும் முயற்சியும் நடந்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டன. அடுத்த ஓரிரு தினங்களில் முடிவாகி விடும்.
எனவே விழுப்புரம் மாநாடு அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் பிரமாண்டமான அ.தி.மு.க. கூட்டணியின் பிரசார மாநாடாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×