என் மலர்
செய்திகள்

தற்கொலை
புதுச்சேரி அருகே முதியவர் தற்கொலை
புதுச்சேரி அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கோவிந்தசாலை முடக்குமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 69). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், சகாயராஜ் என்ற மகனும் உள்ளனர். அந்தோணிராஜ் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோயின் தாக்கம் குறையவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






