என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  நம்பியூர் அருகே 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நம்பியூர் அருகே பாட்டியுடன் ஏற்பட்ட தகராறில் 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
  நம்பியூர்:

  நம்பியூர் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பாயாள். இவருடைய பேத்தி மவுனிகா (வயது 14). இவர் கெட்டிசெவியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 

  இந்நிலையில் நேற்று காலை கருப்பாயாளும், மவுனிகாவும் வீட்டின் அருகே உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது மவுனிகா எனக்கு பசிக்கிறது சாப்பிட்டு விட்டு வருகிறேன் என பாட்டியிடம் கூறியுள்ளார். அதற்கு கருப்பாயாள் தண்ணீர் நின்றுவிடும். அதனால் தண்ணீர் பிடித்து விட்டு சாப்பிட செல்லலாம் என்று கூறியுள்ளார்.

  இதனால் ஆத்திரமடைந்த மவுனிகா வீட்டிற்குள் சென்று சமையல் செய்ய வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×