என் மலர்
செய்திகள்

கமல்ஹாசன்
புதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகன் நியமனம்- கமல் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவராக இருந்த டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இதையடுத்து புதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகனை நியமிக்கிறேன். அவருக்கு நமது கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கட்சி ரீதியாக ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
Next Story