என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  திருச்செங்கோடு அருகே லாரி மீது வேன் மோதல்- 12 பேர் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்செங்கோடு அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
  எலச்சிப்பாளையம்:

  பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் வசித்து வரும் 3 குடும்பங்களை சேர்ந்த 15 பெரியவர்கள், 5 குழந்தைகள் ஆகியோர் டிராவல்ஸ் வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் சுற்றுலாவை முடித்து விட்டு வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

  இந்த வேனை வெங்கடேசன் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வேன் திருச்செங்கோடு அருகே உள்ள சுண்டமேடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் விறகு பாரம் ஏற்றிச்சென்ற லாரி மீது வேன் மோதியது

  இதில் டிரைவர் வெங்கடேசன், வேனில் பயணம் செய்த யுவராஜ் (27), சொர்ணா (25), இந்திராணி (50), மணிகண்டன் (55), சத்ய பிரியா (33), சந்தான கிருஷ்ணன் (52) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் வெங்கடேஸ்வரன் (38), பிரியா (30), புருசோத்தமராஜ் (17), சுமதி (38), பாலாஜிபிரசாத் (20) ஆகிய 5 பேர் லேசான காயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு மற்றும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×